தலைவரின் தர்பார் இன்று முதல் ஆரம்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’தர்பார்’

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதை அடுத்து படக் குழுவினர் இரவு பகலாக தொழில்நுட்ப பணியை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் சற்று முன் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’இன்று முதல் தலைவரின் தர்பார் படத்தின் டப்பிங் ஆரம்பம்’ என அறிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று முதல் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தின் டப்பிங் பணியை தொடங்குவார் என தெரிகிறது.

ரஜினிகாந்தின் டப்பிங் முடிந்த பிறகு நயன்தாரா உள்பட மற்ற கேரக்டர்களில் டப்பிங் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor