
ஆள்மாறாட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்…ஆனால் ஒருவர் பூனை மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த மிக்கேல் கலின் எனப்படும் 34 வயது ஆடவர் மாஸ்கோவிலிருந்து விளாடிவோஸ்டோக் (Vladivostok) நகருக்குப் Aeroflot என்ற விமானத்தில் பயணம் செய்யவிருந்தார்.
அப்போது, தம்முடைய பூனையையும் கொண்டுசெல்லத் திட்டமிட்டார்.
விமானச் சேவை நிறுவனத்தின் நெறிமுறைகளின்படி, செல்லப்பிராணிகள் 8 கிலோகிராம் எடைக்குள் இருக்கவேண்டும்.
அதை விடக் கூடுதல் எடை கொண்ட தம்முடைய பூனையைக் கொண்டுசெல்லமுடியாது என்று அறிந்த கலின், ஒரு திட்டம் போட்டார்.
விமான நிலையத்தில் விமானப் பயணச் சீட்டைப் பெறும்போது, அவருடைய பூனையைப் போன்ற தோற்றமுடைய, எட்டு கிலோவுக்குள் எடையுள்ள ஒரு பூனையைக் காட்டினார்.
விமானத்திற்குள் செல்லும்போது தமது சொந்தப் பூனையைக் கொண்டு சென்றார் கலின்.
ஆனால், அவருடைய தில்முல்லு அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து கலினின் சிறப்புப் பயணி முன்னுரிமைச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன