‘Navigo Liberté +’ புதிய பயண அட்டை! – கட்டண குறைப்பு!!

நவிகோ பயண அட்டையில் மேலும் சில புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருட இறுதியில் இந்த வசதிகள் நடைமுறைக்கு வரும்.

நவிகோ அட்டையுடன் உங்கள் வங்கி கணக்கை இணைப்பதுடன், நேரடியாக வங்கியில் இருந்து தானியங்கி முறையில் கட்டணம் செலுத்தும் இந்த வசதியே புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. <<Navigo Liberté +>> என அழைக்கப்படும் இந்த நவிகோ அட்டையில் மெற்றோ சிட்டையின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை நேற்று புதன்கிழ்மை Ile-de-France Mobilités அறிவித்துள்ளது. Navigo Easy pass போன்று மாதம் மாதம் நீங்கள் பணம் செலுத்தி ‘மீள் நிரப்பு’ செய்யாமல், தானியங்கி மூலம் வங்கியில் இருந்து பணம் செலுத்தப்படும். அதேவேளை மெற்றோ பயணச்சிட்டை கட்டணமாக €1.49 கள் மாத்திரமே (வழக்கமான கட்டணம் €1.90 யூரோக்கள்) அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த Navigo Liberté + பயண அட்டைகள் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor