குளிரூட்டப்பட்ட பொது போக்குவரத்துக்கள்!

விரைவில் இல்-து-பிரான்சுக்குள் இயங்கும் பொது போக்குவரத்து சேவைகளை குளிரூட்டப்பட்ட சேவைகளாக வழங்க திட்டமிட்டுள்ளதாக மாகாண முதல்வர் Valérie Pécresse அறிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை ஜூன் 24 ஆம் திகதி Radio Classique வானொலியில் வழங்கிய நேர்காணலின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இல்-து-பிரான்சுக்குள் இயங்கும் அனைத்து பொது போக்குவரத்துக்களும் ,(பேருந்து உட்பட) குளிரூட்டப்பட்ட சேவைகளாக மாற்றப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதற்கான கால அவகாசமாக 5 வருடங்கள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்-து-பிரான்சுக்குள் இயங்கும் 15,000 பேருந்துகள் குளிரூட்டப்பட்ட உள்ளன. 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த வசதிகள் செய்து முடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவிர, அனைத்து RER சேவைகள், மெற்றோக்கள், புதிதாக சேவைக்கு கொண்டுவரப்பட உள்ள 700 தொடருந்துகள் என அனைத்தும் குளிரூட்டப்பட உள்ளன.

இவற்றில் சிலவற்றுக்கு மாத்திரம் குளிரூட்டப்பட்ட காற்றோட்டம் (refrigerated ventilation) வசதி செய்யப்பட உள்ளது. 2025 க்குள் அனைத்து சேவைகளின் தரமும் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor