பிரான்சில் இருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக கழிவுகள் அனுப்பிய நிறுவனம்..!!

பிரான்சில் இருந்து மலேசியாவுக்கு பெருமளவிலான கழிவு பொருட்களை அனுப்பிய நிறுவனம் ஒன்றுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

பல்வேறு கொள்கலனில் நெகிழி கழிவுகளை ஏற்றி மலேசியாவுக்கு ஏற்றி அனுப்பிய நிறுவனம் ஒன்றுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் தண்டப்பணம் அறவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் குறித்த தனியார் நிறுவனம் ஒன்று இச்செயலில் ஈடுபட்டுள்ளது. மொத்தமாக 870,000 தொன் எடைகொண்ட கழிவுகளை அனுப்பியுள்ளது.

குறித்த நிறுவனத்துக்கு €192,000 கள் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. தவிர குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு தடையும் விதித்துள்ளது. மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை


Recommended For You

About the Author: Editor