
3.2 மில்லியன் போலிக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக Facebook Inc நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் தற்கொலைகளுடன் தொடர்புடைய பதிவுகளை கொண்ட போலிக் கணக்குகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.
இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரை இவ்வாறு போலிக் கணக்குகளை நீக்கியுள்ளதாக Facebook Inc நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த போலிக் கணக்குகளினால் மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவுகள் இடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 1.55 பில்லியன் போலிக்கணக்குகள் நீக்கப்பட்டிருந்தன.
இந்த வருடம் அந்த தொகையை விட 2 மடங்கு போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக Facebook Inc நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாலியல் வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய 11.6 மில்லியன் பதிவுகளை நீக்கியுள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது