
அகில இலங்கை தேசிய மட்ட 12 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஜூனியர் உதைபந்தாட்ட அணிகளில் யா/இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி வீரர்களான பாக்கியநாதன் டேவிட் டாலுங்சன், பாக்கியநாதன் றெக்சன், மரியநேசன் பிரசாந்த் மற்றும் K.சதுர்சன் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதேவேளை பாக்கியநாதன் றெக்சன் மற்றும் மரியநேசன் பிரசாந் ஆகியோர் 19 வயதிற்குட்பட்ட தெற்காசிய உதைபந்தாட்ட தொடர், ஆசிய தகுதிகாண் தொடர் மற்றும் ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான தொடர் என்பவற்றுக்காக இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மூன்று வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
மேலுல் 47வது ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சம்பியன்சிப் போட்டிக்காக இந்தோனேசியா செல்லும் இலங்கை 19 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில் K.சதுர்சன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வருடம் இடம்பெற்ற தேசிய அளவிலான 19 வயது தேசிய அணி வீரர்களின் எண்ணிக்கையில் கொழும்பு சாகிரா கல்லூரிக்கு அடுத்தபடியாக இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளமை சிறப்பாகும்.



