
இந்தோனேஷியாவின் Banda கடற்பரப்பில் 7.3 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று காலை உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ரிக்டர் அளவுகோளில் 7 அலகுகளுக்கு மேல் நிலநடுக்கங்கள் ஏற்படும் போது,பாரிய சேதங்கள் ஏற்படுகின்றன.
எனினும்,இதனால் எந்தவித சேதங்களும் இடம்பெறவில்லை என்பதோடு,சுனாமி எச்சரிக்கையும் இதுவரையில் விடுக்கப்படவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த நிலநடுக்கம்,கடல் மட்டத்திலிருந்து 214 கிலோமீற்றர் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,குறித்த பகுயில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக இந்தோனேஷிய உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.