இலங்கையில் புதுப்புரட்சி

சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள உயர் தரத்திலான பேருந்துகள் 27 ஆம் திகதியிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

முற்றிலும் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காகவே இவை பயன்படுத்தப்பட இருப்பதாக மேற்படி போக்குவரத்துச் சபை கூறியுள்ளது.

இலங்கையின் பொதுப் போக்குவரத்து துறை வரலாற்றில் பிரதான திருப்பு முனையாக இது கருதப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி தற்பொழுது ஒன்பது பேருந்துக்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் மேலும் 37 பேருந்துக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக போக்குவரத்துச் சபை கூறுகிறது.

இதேவேளை இந்த பேருந்துகளில் ஒன்றின் பெறுமதி, சுமார் 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானது என கணிப்பிடப்பட்டுள்ளது.

இவை முதற்கட்டமாக கட்டுபெத்த, மஹரகம, பொலன்னறுவை, மாத்தளை பேருந்து நிலையங்களிலிருந்து தமது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்


Recommended For You

About the Author: ஈழவன்