
வரலாற்றில் முதல் தடவையாக, பதுளை அரசினர் வைத்தியசாலையில் சிறுநீரகமாற்று சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளது.
சிறுநீரகமாற்று சிகிச்சை வைத்திய நிபுணர் உதானரட்னபால தலைமையிலான 13 வைத்தியர்கள் குழுவினரால் (2019-11-11ல்) நடைபெற்ற, இம்மாற்று சத்திரசிகிச்சை பூரணமாக வெற்றியளித்துள்ளது.
பி.எய்ச்.எம்.இஸ்மத் என்ற 42 வயது நிரம்பிய சிறுநீரகநோயாளிக்கு சிறுநீரகங்கள் பழுதடைந்தமையினால் பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிறுநீரகமொன்றை நன்கொடையாக வழங்க எம். ரினாஸ் (39 வயது) என்பவர் முன்வந்தார். இதற்கமையமாற்று சிறுநீரகசத்திர சிகிச்சைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
இச்சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக வைத்திய நிபுனர்களால் முன்னெடுக்கப்பட்டன. இச்சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட டாக்டர்கள் குழுவினரை படங்களில் காணலாம்.