தேர்தலில் அனைவரும் பங்குதாரர்களாக வேண்டும்!!

அமைதியானதும் வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனுமான, ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைவரும் பங்குதாரர்களாக வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்புக் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொதுநலவாய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுநலவாய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

அரசியல் நடவடிக்கை, வாக்களிப்பு, சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள், நீதித்துறை போன்றவற்றில் அங்கத்துவம் வகிப்பவர்கள் தேர்தல்கள் ஆணையாளரின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ளனர்.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், சிவில் சமூக குழுக்கள், பொலிஸார், சர்வதேச சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் சர்வதேச காண்காணிப்பு உள்ளிட்ட வாக்களிப்புக்களுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்து கொள்ள இந்தக் குழுவினர் எதிர்ப்பார்த்துள்ளனர்.

நவம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னர் இந்தக் குழுவின் பிரதிநிதிகள் தமது கண்காணிப்புக்களின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட உள்ளக அறிக்கையை வெளியிடவுள்ளனர்.

இறுதி அறிக்கை பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் அவற்றை பெற்றுக் கொள்ள முடியும். இந்தக் கண்காணிப்பாளர்கள் குழுவினர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor