
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் போது புர்கா தடை செய்யப்பட மாட்டாது என்று தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
எனினும், தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் வாக்காளர்களை அடையாளம் காண்பதை எளிதாக்கும் பொருட்டு தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த முகங்களை அங்கே காண்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, வாக்களிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பில் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ள விடயங்களை சிலர் தவறாக பிரசாரம் செய்வதாக வதந்திகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாக்களிப்பதற்கு கருப்புக் கண்ணாடி அணிந்து வரவும் தலைக்கவசம் அணிந்துவரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அரசியலில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்று பலரினால் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.