வல்வெட்டித்துறை பொலிசாரிற்கு ஏற்பட்ட அநீதி!

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஜனாதிபதித் தேர்தல் தபால்மூல வாக்களிப்பு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் 54 பேர் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்காக விண்ணப்பித்திருந்தனர்.

எனினும், 43 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. குறித்த 43 விண்ணப்பங்களில் 25 விண்ணப்பங்கள் பொலிஸ் நிலைய நிர்வாகக் கட்டமைப்பின் கவனயீனம் காரணமாக நிராகரிக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எனினும், குறித்த விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor