புகையிரத விபத்தில் இளைஞன் பலி – மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

புகையிரதக் கடவைக்குக் குறுக்காகச் சென்றதனால் புகையிரத்த்துடன் மோதுண்டு இளைஞன் ஒருவர் சாவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தினால் யாழ் – காங்கேசன்துறை மார்க்கத்திலான புகையிரத சேவைகள் ஸ்தம்புதமடைத்துள்ளன.
இன்று காலை, காங்கேசன்துறை – கொழும்பு சேவையிலீடுபட்ட புகையிரதம் யாழ்ப்பாணம் நீராவியடி, பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையைக் கடந்த சமயத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை இளம் குடும்பஸ்தர் கடக்க முயன்ற வேளையில் புகையிரத்துடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருந்தார்.
சம்பவத்தையடுத்து, ஆத்திரமடைந்த ஊரவர்கள், புகையிரதக் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திலீடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட் நகர்சேர் கடுகதிப் புகையிரதம் தொடரந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் ஸ்தம்பித்தது.
இதே கடவையில் மூன்றுக்கும் மேற்றபட்ட தடவைகள் பொதுமக்கள் தாக்கப்பட்டதோடு, பல தடவைகள் கால்நடைகள் தாக்கப்பட்டுமுள்ளன.
சம்பவ இடத்துக்கு புகையிரத திணைக்கள காவல் அதிகாரிகள் வந்து பொது மக்களுடன் பேச்சில் ஈடுபட்டனர். எனினும் யாழ்ப்பாண பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருமளவு பொலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டு, பொது மக்களை சமரசம் செய்து வைத்ததனர். பொலீசாரின் தலையீட்டை அடுத்து இரண்டரை மணி நேர இழுபறி முடிவுக்கு வந்தது.

Recommended For You

About the Author: ஈழவன்