
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார இன்று(புதன்கிழமை) நள்ளிரவுடன் இந்த நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று நள்ளிரவுடன் பிரசாரக் கூட்டங்களுக்கும் ஊடகங்களினூடான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைள் நிறைவடைவதுடன் பிரதேச மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரசார அலுவலகங்களும் அகற்றப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.