தொ.தே.ச தலவாக்கலை லிந்துலை அமைப்பாளராக மயில்வாகனம் பிரசாந்த்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலவாக்கலை லிந்துலை அமைப்பாளராக இன்றையதினம் லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த திரு மயில்வாகனம் பிரசாந்த் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் .

இதுவரை காலமும் குறித்த பதவியில் இருந்தவர் பதவி உயர்வு பெற்று அமைச்சுக்கு இடமாற்றலாகி சென்றதன் காரணமாகவே மயில்வாகனம் பிரசாந்த் அவர்கள் இன்று முதல் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளருமான மயில்வாகனம் திலகராஜ் அவர்கள் தெரிவித்தார்

இந்நிகழ்வில் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் திரு புத்திரசிகாமணி தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திரு நகுலேஸ்வரன் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி செயலாளருமான திரு சிவானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர் இந்நிகழ்வானது இன்று ஹட்டன் நகரில் நடைபெற்றது ( லிந்துல. சுரேஷ்


Recommended For You

About the Author: Editor