மல்ட்டி ஃப்ரூட் சாலட் – ஆரோக்கிய உணவு!!

தேவையானவை: ஆப்பிள் – ஒன்று, அன்னாசிப்பழம் – 2 ஸ்லைஸ், ஆரஞ்சு சுளைகள் – 4, சின்ன மாம்பழம் – ஒன்று, கறுப்பு அல்லது பச்சை திராட்சை – அரை கப், சர்க்கரை – தேவைக்கேற்ப, வெனிலா ஐஸ்க்ரீம் – ஒரு கப், டூட்டி ஃப்ரூட்டி – சிறிதளவு.

செய்முறை: பழங்களை நன்கு கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். சர்க்கரையை லேசாக பாகு காய்ச்சவும். அகலமான பவுலில் நறுக்கிய பழங்களை நிரப்பி, மேலே சர்க்கரைப்பாகை ஊற்றவும். அதன்மேல் வெனிலா ஐஸ்க்ரீமை பரப்பி, டூட்டி ஃப்ரூட்டியைத் தூவிப் பரிமாறவும்.


Recommended For You

About the Author: Editor