நான் இப்பொழுது அமெரிக்க குடிமகன் அல்ல – கோட்டா!!

நான் இப்பொழுது அமெரிக்க குடிமகன் அல்ல நான் இலங்கையன்,என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க குடியுரிமை என்பது எனது தனிப்பட்ட விஷயம். எந்தவொரு நபரும் அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்காக செயல்முறை மிகவும் எளிது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் அமெரிக்க குடியுரிமையிலிருந்து விடுபட விரும்பினேன். நான் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அறிவித்தேன். விண்ணப்பங்களை அவர்கள் என்னிடம் கொடுத்தார்கள்.

உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், நீங்கள் செயல்முறைக்குச் சென்று முதலில் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தப்பட்டவுடன், அவர்கள் செயல்முறையைத் தொடங்குவார்கள்.

நான் தூதரகத்தின் குடிமகன் அல்ல என்று சத்தியம் செய்ய வேண்டும். அது முடிந்ததும், எனது அமெரிக்க குடியுரிமையை திரும்பப் பெறுவதற்கான பொருத்தமான ஆவணங்களை நான் ஒப்படைத்தேன்.

ஒரு அமெரிக்க குடிமகனாக நான் பெற்ற பாஸ்போர்ட் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது தான் இலங்கையின் குடிமகன் மட்டுமே எனவும் அவர் கூறியுள்ளார்.

என் மீது குற்றம் சாட்டியவர்கள் காரணமாக இதை நான் விவரிக்கவில்லை என்றும் மக்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தினை தெளிவுபடுத்தவே இதனை கூறியுள்ளதாகவும் கோத்தபாய இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor