
ஊவா வெல்லச பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊவா வெல்லச பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நால்வர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்களே கைதாகியுள்ளனர்.
மேலும் கைதான மாணவர்கள் இன்று பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.