கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது- பசில்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

பசில் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஜூலைக்கலவரம் முதல் தமிழர் பகுதிகளில் பல படுகொலைகளை செய்தவர்கள் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது. இனியும் தமிழ் மக்களை அவர்கள் ஏமாற்ற முடியாது.

மேலும் தமிழ் மக்களுக்கான அனைத்து அபிவிருத்திகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

எதிர்வரும் 17ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய அறிவிக்கப்பட்டதுடன் இந்த மாவட்டத்தில் தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்திகளையும் நாங்கள் செய்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor