தூய்மையான நிர்வாகம் மாத்திரமே நாட்டிற்கு தேவை- சஜித்!!

பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடிய தூய்மையான நிர்வாகமொன்றே நாட்டிற்கு தேவையென புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மீகமுவ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களை துன்பங்களில் இருந்து விடுப்பேன். அதாவது அவர்களின் முக்கிய பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.

மேலும் நாட்டிற்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வினைத்திறனான நிர்வாகம் உருவாக்கப்படும்.

அதனூடாக மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து சேவையாற்றுவேன்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றியடைந்தால், அதனைத் தொடர்ந்து எமது நாட்டில் தூய்மையான நிர்வாக ஆட்சியை பார்க்க கூடியதாக இருக்கும்.

இதேவேளை விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் முழு தெளிவு எனக்கு இருக்கின்றது. அத்துடன் எனது விஞ்ஞாபனம் மற்றையவர்களால் எழுதப்பட்ட ஒன்று அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor