இன்று ஜனாதிபதிக்கு பிரியாவிடை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்கும் இறுதி அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் நடைபெறும் எனினும், நாளை போயாதினம் என்பதனால், அந்தக் கூட்டத்தை இன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரியாவிடை வைபவமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் விசேட அமர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில் குறித்த அமர்வு, இன்று முற்பகல் 11.30க்கு ஆரம்பமாகி 2.30க்கு நிறைவடையும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் இறுதி பாராளுமன்ற அமர்வு என்பதுடன் அடுத்த அமர்வு , டிசெம்பர் 3ஆம் திகதியே சபை ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor