
சிலி நாட்டில் நடந்துவரும் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மேயர் ஓட்டம் பிடித்த வீடியோ வெளியாகி உள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலியில், கடந்த சில மாதங்களாக சுகாதாரம், கல்வி மற்றும் பொது சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எரிபொருட்கள் விலை உயர்வு மற்றும் அந்நாட்டு நாணயமான பீசோவின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு விளக்கம் அளித்தது.
இருப்பினும் அரசைக் கண்டித்து நடந்து வரும் போராட்டங்களால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அரசின் நிலைப்பாடு குறித்து சாண்டியாகோ நகர மேயர் எவ்லின் மாத்தாயிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார்.