
சீனாவில் மனித முகம் கொண்ட மீன் ஒன்று நீர்நிலையில் காணப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மியோ கிராமத்தில் ((Miao Village )) உள்ள நீர் நிலை அருகே பெண் ஒருவர் அமர்ந்திருந்தபோது, தண்ணீரில் நீளமான மீன் ஒன்று கரையை நோக்கி நீந்தி வந்ததை கண்டார்.
கரையை நோக்கி வந்த அந்த மீனுக்கு, கண்கள், மூக்கு மற்றும் வாய் மனிதர்களை போன்ற தோற்றத்தில் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார்.
இதையடுத்து அந்த அதிசய மீனை, தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வெய்போ வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். 12 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ, தற்போது அனைத்து சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
இதேபோல் நார்வேயை சேர்ந்த மீனவர் ஒருவர், டைனோசர் போன்ற தோற்றம் கொண்ட மீனை இதற்கு முன்பு பிடித்தார். அந்த வீடியோவும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.