கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்கப் பிரஜை இல்லை – நாமல் !

கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்கப் பிரஜை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கும் ஆவணத்துடன், நாமல் ராஜபக்ஸ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று தமது டுவிட்டர் தளத்தில் கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் பதிவிட்டிருந்தார்.
நந்தசேன கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் அமெரிக்காவின் பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் இதுவரை உள்ளடக்கப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, கோட்டாபய ராஜபக்ஸ தொடர்ந்தும் அமெரிக்கப் பிரஜை எனவும் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவரால் அந்தப் பதவியை வகிக்க முடியாது எனவும் ஹரின் பெர்னாண்டோ தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 


Recommended For You

About the Author: Editor