
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளன.
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள், அதிபரின் ஊடாகவும் தனியாருக்கான பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் அவர்களின் விலாசத்திற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 716000 இற்கும் அதிகமானோர் தோற்றவுள்ளனர். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.