ஈழ அகதிகளை வாழவும் விடாது. சாகவும் விடாது சித்திரவதையே

திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 42 ஈழ அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறுகோரி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

அதிகாரிகளும் அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 20 அகதிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

அவர்கள் தற்போது திருச்சி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 அகதிகள் ஒரே நேரத்தில் அதுவும் தமிழ்நாட்டில் தற்கொலைக்கு முயன்றமை தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பின்னராவது அரசு ஏன் அவர்கள் விஷம் குடித்தார்கள் என்பதை அராய்ந்து நடவடிக்கை எடுக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அரசோ அவர்களுக்கு எப்படி விஷம் கிடைத்தது என்பது பற்றியே அக்கறையாக விசாரணை செய்கிறது.

இந்திய அரசு ஈழ அகதிகளை வாழவும் விடாது. சாகவும் விடாது. அடைத்து வைத்து சித்திரவதையே செய்யும் என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று கூறும் தலைவர்கள் இனியாவது இந்திய அரசு பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி:-
தோழர் பாலன்


Recommended For You

About the Author: Editor