
அமெரிக்காவுடனான மிலேனியம் (எம்.சி.சி) ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை மேற்கொள்ள ஐவர் அடங்கிய நீதியரசர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மிலேனியம் ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டில் பல அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமெனவும் இது மிகவும் பயன்மிக்கதொன்று எனவும் அரசாங்கம் கூறி வருகின்றது.
அத்துடன் குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மறுபுறம் மிலேனியம் ஒப்பந்தம் ஏற்புடையதல்ல என அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் தொடர்ந்து எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றன.
அதோடு மிலேனியம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாமென மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்த ஐவர் அடங்கிய நீதியரசர் குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.