
கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் வளிமண்டலத்தில் ஏற்பட்டிருந்த தூசு துகள்களின் செறிவு தற்போது சீரடைந்திருப்பதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடக்கு திசையில் இருந்து வீசிய காற்றின் காரணமாக இலங்கையின் வளிமண்டலத்தில் தூசு துகள்கள் அதிகரித்திருந்தன.
இலங்கையின் வளி தர குறியீடு 150 வரையில் அதிகரித்திருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த நிலைமை சீரடைந்துள்ளது.
எனினும் இந்த நிலைமை மீண்டும் எதிர்வரும் 13ம் திகதி எற்படக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவை உறுதியானவை அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் டெல்லியில் ஏற்பட்டிருந்த வளி மாசுவினாலேயே இலங்கையிலும் அந்த நிலைமை ஏற்பட்டது என்று கூறுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.