ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் தீ.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகன தரிப்பிடத்தில் நேற்று (10) இரவு 10 மணி அளவில் திடீர் தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு 1, முதலிகே மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வாகன தரிப்பிடத்தில் இந்த தீ பரவல் ஏற்பட்டதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைப்பதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தீயினால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 47 மோட்டார் சைக்கிள்களும், முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்