10.11.2019 ராசி பலன்

மேஷம்

மேஷம்: கொஞ்சம் அலைச்சலும் சிறு சிறு ஏமாற்றமும், வந்து பிள்ளைகளால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் விரயங்கள் வருவ தற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி இருக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் எண்ணங்களை நிறைவேற்ற புதிய யுக்திகளை கையாளுவீர்கள். நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுக்கிடைக்கும். புகழ் கூடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனசஞ்சலம் நீங்கும். எதிர் பார்த்த இடத்தி லிருந்து, தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நிலுவை தொகை கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் உயர் அதிகாரி சில நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பார். புதிய பாதையில் பயணிக்கும் நாள்.

கடகம்

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனசஞ்சலம் நீங்கும். எதிர் பார்த்த இடத்தி லிருந்து, தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நிலுவை தொகை கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் உயர் அதிகாரி சில நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பார். புதிய பாதையில் பயணிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் நடந்து கொண்டிருப்பதால் உங்களின் எதிர் பார்ப்புகள் அனைத்தும் தாமதமாக முடியும். வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமாக செல்லுங்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் அதரவு கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். முக்கிய பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும், சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்பாராத யோகம் கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத் துவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியான நிலை உருவாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கனவு நினைவாகும் நாள்.

தனுசு

தனுசு: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

மகரம்: தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதால் அவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத் தில் அதிரடியான முடிவு எடுப்பதால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். முயற்ச்சியால் முன்னேறும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன் மனைவி இடையே அன்பும் ஆதரவும் பெருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக் கும். உற்சாகமான நாள்.

மீனம்

மீனம்: மாலை 5.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வு எடுக்க முடியாத படி வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களின் தவறுகளை சுற்றிக் கட்டுவதன் மூலம் தேவையில்லாத பிரச்சனை கள் உருவாகும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. இடம், பொருள், ஏவல், அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


Recommended For You

About the Author: Editor