மீண்டும் திறக்கப்பட்டது ரஜரட்டை பல்கலைக்கழகம்!!

திடீரென பரவிய வைரஸ் காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தளை வளாகத்திலுள்ள நான்கு பீடங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம், மனையியல் மற்றும் விவசாய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன், அப்பீட மாணவர்களுக்கான பரீட்சைகளும் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விடுதி வசதிகளைக் கொண்ட மாணவர்கள் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் மாலை 4 மணி அளவில் விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் நிருவாகம் மேலும் கேட்டுள்ளது.

இப்பல்கலையில் திடீரென பரவிய வைரஸ் காய்ச்சலினால் மாணவியொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor