உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு 17ஆம் திகதி வெளியிடப்படும்

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு 17ஆம் திகதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு 17 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வாக்காளர் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கும் அனைத்து வாக்காளர்களும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

வாக்களிப்பின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்