சிவில் பாதுகாப்பு ஆசிரியர் கணக்காய்வு செய்வதற்காக சில உத்தியோகத்தர்கள் ஆய்வு களம்!!

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் (21/06/2019)சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஆசிரியர்களுக்கான கணக்காய்வு செய்வதற்காக சில உத்தியோகத்தர்கள் ஆய்வு செய்வதற்காக கள விஜயம் குறித்த பகுதிக்கு

விஜயம் செய்துள்ளனர் குறித்த முன்பள்ளி ஆசிரியர்களை அழைத்து தனது கடமைகளை செய்ததோடு குறித்த முன்பள்ளி பெற்றோர் இருவரை அழைத்து குறித்த கணக்கு விபரம் தொடர்பாக விசாரித்த பொழுது குறித்த பெற்றோர்களும் தாங்கள் செவ்வனவே தங்களிடம் கையில் இருந்த கணக்கு கொப்பியினை உறிய அதிகாரியிடம் வழங்கினார்கள் இருந்தபொழுதும் குறித்த உத்தியோகத்தர் கொப்பியினையும் அதனுள் இணைக்கப்படட சிடடைகளையும் பார்த்துவிட்டு மீன் வாங்கி வந்ததற்கான சீட்டை இணைக்கப்பட வில்லை எனவும் வெறுமனே எழுத்தினால் மாத்திரமே கணக்குகள் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறி குறித்த பெற்றோரிடம் வினாவிய போது பெற்றோரும் தகுந்த பதிலை வழங்க பெற்றோரால் வழங்கப்படட கணக்கு கொப்பியினை முறைகேடாக வீசி எறிந்ததுடன் அங்கு நின்ற பெற்றோரை தகாத முறையில் பேசியதோடு மட்டுமல்லது குறித்த பெற்றோர் கண்கள் கலங்கும் வகையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் நடந்து கொண்டுள்ளார் குறித்த பெற்றோர் விம்மி அழுதபடி எம்மிடம் கூரியதுததுடன் இவ்வாறே பதிக்காப்படட பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் தாங்கள் தங்கள் கணவர் கூட இவ்வாறு நடந்து கொள்ளவில்லை எனவும் குறித்த பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கூறுகையில் சிவில் பாதுகாப்பு திணைக்கள கணக்காளர் தனது திணைக்கள பணியாளர்களை மாத்திரம் கண்டிப்பதற்கும் பேசுவதற்கும் அதிகாரம் உண்டு எனவும் எமக்கு பேசுவதற்கோ கண்டிப்பதற்கு குறித்த உத்தியோகத்திற்கு கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளனர் தாம் தற்பொழுது பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் குறித்த சம்பவம் குறித்து முன்பள்ளி ஆசிரியர் முன்பாகவும் முன் பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் கிராம சேவகர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் போன்றோரும் நின்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர் இதுபோன்று கிளிநொச்சி விநாயகபுரம் முன்பள்ளியிலும் குறித்த உத்தியோகத்தர் முறைகேடாக நடந்து கொண்டமை குறித்து மக்கள் பெரும் விசனம் அடைந்துள்ளனர்

இவ்வாறான உத்தியோகத்தர்கள் மக்கள் மத்தியில் பணிபுரியும் பொழுது சிவில் பாதுகாப்பு திணைக்களத்திட்கே நற்பெயர்க்கு களங்கம் விளைவிக்கும் என்பதில் ஐயம் இல்லை


Recommended For You

About the Author: Editor