அயோத்தியில் இராமர் கோயிலை கட்டுங்கள் – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

அயோத்தியில் பாபர் மசூதி, வெற்றிடத்தில் கட்டப்படவில்லை என்றும், பாபர் மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரஞ்சன் கோகாயின் தீர்ப்பின் படி, பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது என்றும், இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல எனவும் தெரிவித்தார்.

அத்துடன், ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாதுமசூதியில் 1949-ம் ஆண்டில் சிலைகள் வைக்கப்பட்டன. மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது என்றும் கூறினார்.

தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது எனத் தெரிவித்த அவர், தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அயோத்தியில் காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. பாபர் மசூதியில் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை என ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,

1857 இற்கு முன்னர் வரை இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தில் வழிபடத் தடை இல்லை. 1857இல் கட்டடத்தின் உட்பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன.

பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்கள் இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல். இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும்.

பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது. இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல. ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது.

மசூதியில் 1949ஆம் ஆண்டில் சிலைகள் வைக்கப்பட்டன. மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை. அதன்படியே உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது. தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை.

அயோத்திதான் இராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் கருதுகிறார்கள். அதை மறுக்க முடியாது. அதே இடத்தை இஸ்லாமியர்கள் பாபர் மசூதி என்று அழைக்கிறார்கள். ஆவணங்களின் படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது.

மத நம்பிக்கை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படி உரிமை. பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அந்த இடம் இஸ்லாம் முறைப்படி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்