அயோத்தி தீர்ப்பின் எதிரொலி – இணையங்கள் முடக்கம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி தீர்ப்பு இன்று (சனிக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இணையத்தள சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சேவைகள் நாளை காலை வரை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்றுள்ள நிலையில், பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வரலாற்று முக்கிய தீர்ப்பின் காரணமாக எவ்வித பிரச்சினைகளும் தோன்றாமல் இருக்கும் வகையில் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மும்பை, கோவா, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு கருதி முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இணையத்தள பாவனையாளர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்காமல் இருக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்