பிரதான வேட்பாளர்களுக்கு கண்டனம் தெரிவித்த மைத்திரி.

இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதாக இரு பிரதான வேட்பாளர்களும் உறுதியளித்தமையை வன்மையாக கண்டிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீரோட்ட வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இயற்கை உரத்தை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு செல்லாது இரசாயன உரப் பயன்பாடு ஆபத்துக்களையே ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் உறுதிமொழி வழங்கிய வேட்பாளர்கள் இரசாயன உரத்தை இறக்குமதி செய்யும் போது பாதிக்கப்படும் மக்களுக்கு சிறுநீரககங்களை வழங்க உரக் கப்பலுக்கு பின்னால் சிறுநீரக கப்பலையும் கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விவசாய பொருளாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் அரசியல் தலைவர்களின் கடமைகளான போதிலும் ஆரோக்கியமான மக்கள் சமூகத்தை உருவாக்குவதற்கு தடை ஏற்படும் வகையிலான தீர்மானங்களை மேற்கொள்வதை அவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காக இரசாயன பசளை பயன்பாட்டினைத் தவிர்த்து சேதனப் பசளை பயன்பாட்டுக் கொள்கைகளை நோக்கி நாடு பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்