திருவள்ளுவரும் நானும் காவியில் சிக்க மாட்டோம்: ரஜினி பேட்டி

திருவள்ளுவரை காவியாக மாற்ற முயற்சித்ததால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இன்று கமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பாஜவின் தனிப்பட்ட விருப்பம்; அதனை சர்ச்சையாக்கி இருக்க வேண்டியதில்லை. திருவள்ளுவரைப் போல எனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடக்கிறது.

காவி சாயத்துக்கு திருவள்ளுவரும் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறினார். இதன் மூலம் ரஜினிகாந்த் அரசியலில் குதித்தாலும் பாஜகவுடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள மாட்டேன்’ என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலுக்குள் கட்சி ஆரம்பித்து அதில் உங்களுடைய கட்சி போட்டியிடுமா? என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறினார்.

இதில் இருந்து அவர் உள்ளாட்சி தேர்தலுக்குள் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று தெரிகிறது


Recommended For You

About the Author: Editor