‘அசுரன்’ ரீமேக்: மஞ்சுவாரியர் கேரக்டரில் ரஜினி பட நாயகி!

தனுஷ் மஞ்சுவாரியர் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ’அசுரன்’. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்று ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது மட்டுமின்றி அரசியல் பிரபலங்களும் இந்த படத்திற்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது ’அசுரன்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தனுஷ் நடித்த கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், இந்த படத்தின் மற்றொரு முக்கிய கேரக்டரான மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிக்கும் நடிகை யார் என்பது குறித்த பரிசீலனைய்யில் கடந்த சில நாட்களாக படக்குழுவினர் இருந்தனர்.

இந்த கேரக்டருக்கு ஒரு சில முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்ரேயா சரண் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்ரேயா சரண் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’, தனுஷ் நடித்த ’திருவிளையாடல்’ உள்பட பல தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor