போலி ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொடுத்த நபர்களுக்கு பத்து வருட சிறை..!!

வானச சாரதி ஓட்டுனர் உரிமத்தை சட்டவிரோதமாக பெற்றுக்கொடுத்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பல நூற்றுக்கணக்கான ஓட்டுனர் உரிமத்தை பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோத முறையில் பெற்றுக்கொடுத்துள்ளனர். இந்த வழக்கில் Val-de-Marne மற்றும் Seine-Saint-Denis ஆகிய நகரங்களில் வைத்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவலை பொபினி நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட உள்ள இவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் யூரோக்கள் வரை தண்டப்பணமும் அறவிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

€1,500 களுக்கு செலவு செய்து பெறவேண்டிய ஓட்டுனர் உரிமத்தை இவர்கள் சட்டவிரோதமாக €4,000 வரை பெற்றுக்கொண்டு பெற்றுக்கொடுத்துள்ளனர். செந்தனியில் உள்ள பிரபல சாரதி பயிற்சி நிறுவனம் ஒன்றும் இதில் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor