விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலம்!

கடன் பாக்கி காரணமாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி ஆகியவை ஜூலை 26 தேதி ஏலத்துக்கு விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீடு மற்றும் மதுராந்தகம் அருகே மாமண்டூரில் உள்ளஅவருக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி ஆகியவை ஜூலை 26 தேதி ஏலம் விடப்படுகிறது.

விஜயகாந்த் – பிரேமலதா அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடனை முறையாக செலுத்தவில்லை மற்றும் அதற்கான வட்டியையும் செலுத்தவில்லை என்ற காரணத்தால் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதன் மதிப்பு ரூ.5.52 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விஜயகாந்த் தரப்பில் இருந்து, கடனை முழுமையாக செலுத்தும் பட்சத்தில் ஏலம் கைவிடப்படும் வாய்ப்பு கூட இருக்கிறது.


Recommended For You

About the Author: Editor