சிறைச்சாலையை தீயிட்டு கொழுத்த முற்பட்ட கைதி!

நேற்று வியாழக்கிழமை சிறைக்கைதி ஒருவர் தனது அறையை தீயிட்டு கொழுத்த முற்பட்டுள்ளார்.

Grasse நகரில் இடம்பெற்றுள்ளது இச்சம்பவம். இங்குள்ள சிறைச்சாலை ஒன்றில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தனது அறையையை தீயிட முற்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை நண்பகலின் போது சில காகிதங்களை தனது படுக்கை மெத்தை மீது வைத்து காகிதத்தை பற்ற வைத்துள்ளார். உடனடியாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் இச்சம்பவத்தை தடுக்க முற்பட்டுள்ளார். ஆனால் அந்த அதிகாரியை சிறைக்கைதி தாக்கியுள்ளார்.

அதற்குள்ளாக தீ மெத்தை மீது பரவியுள்ளது. சிறைக்கைதியும் அதிகாரியும் சண்டையிட்டுள்ளனர். ஒருவழியாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அறைக்குள் நிரம்பிய புகை காரணமாக அதிகாரி ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

வன்முறையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குறித்த கைதி, 2020 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor