8,000 கஞ்சா செடிகள் மீட்பு..!!

பிரான்சில் முதன் முறையாக இவ்வளவு தொகை கொண்ட கஞ்சா தோட்டத்தினை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
நவம்பர் 6 ஆம் திகதி புதன்கிழமை Lille மாவட்டத்தின் Roubaix நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு இயற்கை வேளான்மை எனும் பெயரில் ஒரு ரகசிய இடத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளன.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்குள் நுழைந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. மொத்தமாக 8,000 செடிகள் வளர்க்கப்பட்டு பெரும் தோட்டமாக இந்த கஞ்சா செடிகள் காணப்பட்டுள்ளன.
இதுபோல் கஞ்சா செடிகள் மீட்கப்படுவது பிரான்சிலேயே இதுதான் முதன் முறை. இதற்கு முந்தைய சாதனையாக 2016 ஆம் ஆண்டில் 4,000 செடிகள் மீட்கப்பட்டிருந்தன. தற்போது இரண்டு மடங்கு அளவுடைய செடிகள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளுடன் மீட்கப்பட்ட கஞ்சா செடிகளின் மதிப்பும் கணக்கிடப்பட்டு வருகின்றது.

Recommended For You

About the Author: Editor