40 ஆயிரம் மாணவர்களுடன் பிரதமர் மோடி யோகா

சர்வதேச யோகா தினத்தையொட்டி ஜார்க்கண்ட் ராஞ்சியில் நடக்கும் யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

ராஞ்சி பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் மாணவர்களுடன் பிரதமர் மோடி யோகா மேற்கொண்டார்.

இதில் சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பேசிய அவர், “நமது உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்க யோகா அவசியம்.

யோகாவை அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து பகுதிகளுக்கும் பரப்ப வேண்டும். நமது இந்திய கலாச்சாரத்தில் யோகா முக்கிய பங்காற்றி வருகிறது.

உலக நாடுகள் பலவும் யோகா செய்து அதன் பலன்களை அனுபவித்து வருகின்றன. இருதயம் தொடர்பான பல்வேறு நோய்களை யோகா தடுக்கும்” என்று கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா அறிவித்தது.

அதன்படி, 2019 ஆம் ஆண்டு “இதய ஆரோக்கியத்திற்கு யோகா” என்ற கருத்தை மையமாக கொண்டு இன்று யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor