திருச்சி சிறையில் 26 பேர் தற்கொலை முயற்சி!

இந்தியா தமிழ்நாட்டின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை தமிழர்கள் உட்பட உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு கைதிகள் 40 விசம் அருந்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டவர்களிற்கான சிறப்பு முகாமில் வெளிநாட்டு கைதிகள் தடுத்து வைக்கபட்டுள்ளனர்.

முகாமில் உள்ள 46 கைதிகள் தங்களிற்கு தண்டனை காலம் முடிவடைந்ததால் தங்கள் தங்கள் நாடுகளிற்கு அனுப்பிவைக்குமாறு கைதிகள் அதிகாரிகளை கோரிவருகின்றனர்.

எனினும் அவர்களை சொந்த நாடுகளிற்கு அனுப்பிவைப்பதில் அதிகாரிகள் தாமதம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில் தங்களை விடுதலை செய்யக்கோரி நேற்று திடீர் உண்ணாவிரதப்போராட்டத்தில் குறித்த கைதிகள் ஆரம்பித்தனர்.

அந்தவகையில் நேற்று முதல் உணவை தவிர்த்து போராட்டத்தை தொடர்ந்த நிலையில் இன்று காலை கைதிகளில் 26 பேர் விசம் குடித்ததாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கைதிகளிற்கு விசம் எப்படி கிடைத்தது அவர்கள் எந்த வகை விசத்தை பயன்படுத்தினர் என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor