ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் – ஜனாதிபதியிடம் கோரிக்கை.

ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

ஊடக விதிமுறைகளை மீறும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பாகவே நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் குறிப்பிடுகையில், “இது தொடர்பான விசேட கலந்துரையாடல் குறித்த தரப்பினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.

ஊடக விதிமுறைகளை மீறும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

இதேவேளை, 13ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சகல பிரசார நடவடிக்கைகளும் நிறைவடையவுள்ளன.

இந்நிலையில், பிரசாரக் கூட்டங்களில் வேட்பாளர்கள் தெரிவித்த கருத்துக்களை 14 ஆம் திகதி வானொலிகள் மற்றும் தொலைக் காட்சிகளில் ஒலிபரப்ப முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்