நீர்ப்பற்றாக்குறைக்கு நிலவிலிருந்து நீர்!!

உலகில் தற்போது இருக்கும் மில்லியனர்களில் ஒருவரான ஜெஃப் பெஸாஸ், நிலவுக்கு மனிதர்களை அனுப்பிவைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

அவரது ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், மசாசூசெட்ஸ் நகரில் நடைபெற்ற JFK விண்வெளி மாநாட்டில் அது தொடர்பாக உரையாடியிருக்கிறார்.

அப்போது, நிலவில் இருக்கும் பள்ளங்களுக்கு அடியில் பனிக்கட்டி வடிவில் நீர் மறைந்திருப்பதை அமெரிக்காவின் அப்பலோ திட்டத்தின் மூலமாகத் தெரிந்துகொண்டேன் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “நாம் நிலவில் இருக்கும் பனிக்கட்டியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக மாற்றுவதன் மூலமாக ராக்கெட்டுகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஜெஃப் இதைப் பற்றிப் பேசுவது முதல் முறையல்ல. கடந்த மே மாதம் BE-4 என்ற புதிய இன்ஜினை அறிமுகப்படுத்தியிருந்தார்.

திரவ ஹைட்ரஜனை இந்த இன்ஜின் எரிபொருளாகப் பயன்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், அதைப் பயன்படுத்தும் ப்ளூ மூன் லேண்டர் என்ற விண்கலம் மூலமாக நிலவுக்கு மனிதர்கள் செல்ல முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.


Recommended For You

About the Author: Editor