08.11.2019 ராசி பலன்

மேஷம்

மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். பிள்ளைகளின் உணர்வு களை புரிந்து கொள்ளுங்கள். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். வாகனங்களில் பழுது ஏற்பட்டு சரியாகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாக பேசி முடிப்பீர்கள். பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஆதரவு பெருகும் நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புதிய யுத்திகளினால் நல்ல லாபம் பெறுவீர்கள் நன்மைகள் பெருகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயர் அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள் வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். சாதனை படைக்கும் நாள்.

கடகம்

கடகம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வீர்கள் உடன் பிறந்தவர்கள் உங்களின் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள் முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலை சுமைகளினால் அவ்வப்போது கோபப்படுவீர்கள் குடும்பத்தில் உள்ளவர் வளைந்து கொடுத்து போவது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம் வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அணுசரனையாக நடந்து கொள்ளுங்கள். சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: கடினாமான காரியங்களும் எளிதாக முடியும் சகோதரர்களால் ஆதாயம் உண்டு விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றி அடையும் வியாபாரத்தில் கூட்டாளிகளினால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

துலாம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரபலங்கள் மற்றும் அதிகார பதவிகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கில் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும் சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். உங்களின் நட்பு வட்டாரம் விரிவடையும். அண்டை அயலார்கள்.உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும் . உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டு. வாகன பயணங்களில் கவனம் தேவை. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: துணிச்சலாக சில மிக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் உடன் பிறந்தவர்கள் உங்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சனைகள் சாதகமாக முடியும். துணிவுடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். விலகி சென்றவர்களும் விரும்பி வருவார்கள். நீண்ட நாளாக வர வேண்டிய பணம்கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உற்சாகமாக பணிகளை செய்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

மீனம்

மீனம்: ராசியில் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களை கையில் எடுத்து கொண்டு இருக்காதீர்கள். மற்றவர்களின் விஷயத்தில் அனாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளினால் அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவைப்படும் நாள்


Recommended For You

About the Author: Editor