நெற்றியில் குங்குமம் வைப்பது எதற்காக?

மங்கையர்கள் திலகம் வைத்து கொள்வது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது ஆனால் திலகமிடுவது மங்கள குறியீடு மட்டுமல்ல அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது

மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும் வேறு மனிதர்களின் என்ன பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் இல்லை வேறுமாதிரியாக அமைந்தால் பிரச்சனை தான்

வேறு மாதிரியான அதாவது எதிர்மறையான பதிவுகள் மூளையை அண்டாமல் புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும் திலகமோ விபூதி மற்றும் சந்தனமோ தடுத்துவிடுகிறது இதனால் நமது மூளையானது எப்போதும் எதிர்மறை சக்திகளால் தாக்கப்படுவது தவிர்க்க பட்டு விடுகிறது எனவே தான் நமது முன்னோர்கள் வெறும் நெற்றியோடு யாரும் இருக்க கூடாது என்று சொன்னார்கள்.


Recommended For You

About the Author: Editor