சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சோள தோசை.

சிறு தானியத்தில் ஒன்றான வெள்ளை சோளத்தை அரிசிக்கு பதிலாக பயன்படுத்தி செய்யும் இந்த தோசை மிகவும் ஆரோக்கியமானது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. இந்த சுவையான சோள தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்

வெள்ளை சோளம் – 1 கப்

உளுத்தம்பருப்பு – அரை கப்

இட்லி அரிசி – 1 கப்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

சீரகம் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெள்ளை சோளத்தை தனியாகவும், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்தும் நன்றாக கழுவி, களைந்து ஆறு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பிறகு, நன்றாக ஊறிய இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயக் கலவையை இட்லிக்கு அரைப்பது போல நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு, சோளம் ஊறியதும் மிக்ஸியில் போட்டு நீர் விடாமல் அரைத்து பின்பு நீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நைசாக அரைத்து உளுத்தம்பருப்பு மாவோடு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து ஐந்து மணி நேரம் புளிக்க வைத்துக் கொள்ளவும்.

பின்பு, அடுப்பில் தோசை தவாவை காய வைத்து, தோசை மாவுப் பதத்திற்கு மாவை கரைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்தால் மெல்லிதாக சுவையான சோள தோசை தயார்.


Recommended For You

About the Author: Editor